நடவடிக்கை செய்தி
அனர்த்த்த்திற்குள்ளான கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலின் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக சிதுரல கப்பல் தீவை விட்டு புறப்பட்டது
இலங்கைக்கு தெற்கே, ஹம்பாந்தோட்டைக்கு சுமார் 354 கடல் மைல் (655 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் பாதகமான வானிலை காரணமாக கவிழ்ந்த கேஷான் புதா 1 என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து நான்கு (04) மீனவர்கள் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் மீட்கப்பட்டதுடன், அவ் மீனவர்களை மீட்கும் நடவடிக்கைக்காக இலங்கை கடற்படையினால், இலங்கை கடற்படை கப்பலான சிதுரல அந்த கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது.
30 Oct 2025
கல்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்தப்பட்ட 956 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர், 2025 அக்டோபர் 27 ஆம் திகதி காலை, கல்பிட்டி துடாவ கடற்கரை மற்றும் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் தொள்ளாயிரத்து ஐம்பத்தாறு (956) கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகு ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
28 Oct 2025
கிழக்கு கடலில் நோய்வாய்ப்பட்ட MV IYO கப்பலின் பணியாளர் ஒருவரை சிகிச்சைக்காக தரையிறக்க கடற்படையின் உதவி
கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், திருகோணமலைப் பகுதிக்கு அப்பால் கிழக்குக் கடலில் பயணித்துக் கொண்டிருந்த MV IYO என்ற சரக்குக் கப்பலின் மிகவும் நோய்வாய்ப்பட்ட பணியாளர் ஒருவர், இலங்கை கடற்படையின் உதவியுடன் அவசரமாக கரைக்குக் கொண்டுவரப்பட்டு, சிகிச்சைக்காக 2025 அக்டோபர் 26 ஆம் திகதி திருகோணமலை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
27 Oct 2025
தெற்கு கடலில் முக்கிய இயந்திரங்கள் செயலிழந்து, ஆபத்தில் சிக்கிய MV INTEGRITY STAR வணிகக் கப்பலின் பணியாளர்களை கடற்படை வெற்றிகரமாக மீட்டது
இலங்கைக்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் அதன் முக்கிய இயந்திரங்கள் செயலிழந்ததால், பேரிடரிலும் உயிருக்கு ஆபத்திலும் இருந்த வணிகக் கப்பலான MV INTEGRITY STAR இன் பணியாளர்கள், கடற்படையினரால் வெற்றிகரமான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இன்று (2025 அக்டோபர் 26,) காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
26 Oct 2025
சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 28 பேர் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாண சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, கடந்த பதினைந்து நாட்களில் (2025 அக்டோபர் 08 முதல் அக்டோபர் 19 வரை) உள்ளூர் நீர்ப்பரப்புகளை உள்ளடக்கிய வகையில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட, இருபத்தெட்டு (28) சந்தேக நபர்களுடன், எட்டு டிங்கி படகுகளை கைப்பற்றினர்.
23 Oct 2025
கல்பிட்டி கடற்கரையில் கடலுக்குள் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 1416 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர், 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் திகதி காலை கல்பிட்டி-தலவில கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து நானூற்று பதினாறு (1416) கிலோகிராம் பீடி இலைகளைக் கைப்பற்றினர்.
22 Oct 2025
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவு நோக்கி மிதந்து வந்த இந்திய மீன்பிடிக் கப்பலில் இருந்து 03 மீனவர்களை கடற்படை பாதுகாப்பாக மீட்டது
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்து யாழ்ப்பாணம் அனலைதீவு நோக்கி மிதந்து வந்த இந்திய மீன்பிடிக் கப்பலில் இருந்து மூன்று (03) மீனவர்கள், இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட வெற்றிகரமான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் 2025 அக்டோபர் 16 ஆம் திகதி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
22 Oct 2025
53 கிலோகிராம் ஹெராயினைக் கொண்டு சென்ற பல நாள் மீன்பிடி படகுடன் தெற்கு கடலில் ஐந்து சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படைக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், தெற்கு கடலில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் ஐந்து (05) சந்தேக நபர்களுடன் உள்ளூர் பல நாள் மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டது. பல நாள் மீன்பிடி படகு இன்று (2025 அக்டோபர் 17) காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மேலும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் நிபுணர்களின் உதவியுடன் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், படகில் இரண்டு உறைகளில் பொதிசெய்யப்பட்ட சுமார் 53 கிலோ 134 கிராம் ஹெராயின் இருப்பது தெரியவந்தது. இவ் போதைப்பொருள் தொகை, சந்தேக நபர்கள் மற்றும் பல நாள் மீன்பிடி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.
17 Oct 2025
யாழ்ப்பாணம், வேலணித்துறை பகுதியில் சட்டவிரோதமாக கடலட்டைகளை கொண்டு சென்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்
யாழ்ப்பாணம், வேலணித்துறை பகுதியில் 2025 அக்டோபர் 14 ஆம் திகதி காலை இலங்கை கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் போது, செல்லுபடியாகும் அனுமதிபத்திரம் இன்றி சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட கடலட்டைகளை கொண்டு சென்ற இரண்டு (02) நபர்களுடன் சுமார் ஆயிரத்து இருநூற்று நாற்பது (1240) கடலட்டைகள் மற்றும் ஒரு (01) கெப் வண்டியையும் கைப்பற்றப்பட்டது.
16 Oct 2025
தெற்கு கடலில் ஹெரோயின், ஐஸ் மற்றும் ஹஷிஷ் சுமார் 839 கிலோகிராம் அடங்கிய பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன
இலங்கை கடற்படை பாதுகாப்பான நாட்டை உறுதிபடுத்துவதற்காக போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் போது கிடைத்த நம்பகமான தகவலின்படி 2025 அக்டோபர் 14 ஆம் திகதி காலை, தெற்கு கடலில் கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த ஹெரோயின், ஐஸ் மற்றும் ஹாஷிஷ் போதைப்பொருட்கள் அடங்கிய சுமார் 839 கிலோகிராம் அடங்கிய ஐம்பத்தொரு (51) பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோர் தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் கையிருப்பை ஆய்வு செய்வதில் பங்கேற்றனர்.
15 Oct 2025


