நடவடிக்கை செய்தி

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன

இலங்கை கடற்படையினர், 2025 மே மாதம் 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கைகயின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 108 கிலோகிராம் பீடி இலைகள் (ஈரமான எடையுடன்) , சுமார் 2,600 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு (01) சந்தேக நபரையும் மறைத்து வைக்கப்பட்டருந்த 732 கிராம் கொகேன் போதைப்பொருளானது கைப்பற்றப்பட்டது.

21 May 2025

அறுகம்பே பீனட் பார்ம் கடற்கரையில் விபத்திற்குள்ளான வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக கடற்படையினது உதவி

2025 மே 15 அன்று, பனாம அறுகம்பே பீனட் பார்ம் கடற்கரையில் சர்பிங் செய்யும் போது காயமடைந்த ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணுக்கு கடற்படை அடிப்படை முதலுதவி அளித்து, மேலதிக சிகிச்சைக்காக பானம அரசு மருத்துவமனைக்கு உட்படுத்துவதற்காக கடற்படையினர் உதவினர்.

19 May 2025

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 675 கிலோ பீடி இலைகளுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2025 ஏப்ரல் 01 ஆம் திகதி இரவு கல்பிட்டி பராமுனை கடற்பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட அறுநூற்று எழுபத்தைந்து (675) கிலோகிராம் பீடி இலைகளுடன் டிங்கி (01) மற்றும் இரண்டு சந்தேக நபர்களை (02) கைது செய்தனர்.

02 Apr 2025

புத்தளத்தில் 3000 வெளிநாட்டு சிகரட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி புத்தளம் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

01 Apr 2025

தென் கடலில் பயணித்துக்கொண்டிருந்த வெளிநாட்டுக் கப்பலில் நோய்வாய்ப்பட்டிருந்த சீன நாட்டவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்குக் கொண்டு வருவதற்கு கடற்படையினர் உதவினர்

இலங்கைக்கு தெற்கே, காலியில் இருந்து 63 கடல் மைல் (சுமார் 116 கி.மீ) தொலைவில் உள்ள கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஆபத்தான நிலையில் இருந்த MV AE Neptune என்ற கப்பலின் பணிக் குழுவைச் சேர்ந்த சீன நபர், கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் விரைவாக கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு இன்று (2025 மார்ச் 30) கொண்டு வருவதற்கு கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

30 Mar 2025

சுமார் 08 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கையிருப்புடன் சந்தேகரொருவர் பரந்தன் பிதேசத்தில் கைது

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் இருபது (20) கிலோகிராம் நூற்று ஐம்பது (150) கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற லொரி (01) மற்றும் ஒரு சந்தேக நபர் 2025 மார்ச் 26 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டார்.

27 Mar 2025

இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகொன்று வடகடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் நெடுந் தீவுக்கு அப்பால், மேற்கொண்ட சிறப்பு தேடல் நடவடிக்கையின் போது, சட்டவிரோமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகொன்றுடன் (01) இந்திய மீன்வர்கள் பதினொரு (11) பேர் இன்று 2025 மார்ச் 27ஆம் திகதி அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

27 Mar 2025

05th Mr. Master/Physique/Hercules 2025 உடற்கட்டமைப்பு போட்டியில் கடற்படைக்கு பல வெற்றிகள்

2025 மார்ச் 23 அன்று ஹோமாகம, மேல் மாகாணம், கொழும்பு SAPCE PARK பூங்காவில் நடைபெற்ற 05th Mr. Master/Physique/Hercules 2025 இந்தப் போட்டியில் கடற்படை உடற்கட்டமைப்பு அணிக்கு பல வெற்றிகளைப் பெற முடிந்தது.

26 Mar 2025

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கொண்டு வர முயன்ற ஏலக்காய் மற்றும் அழகுசாதனப் பொருட்களுடன் 03 சந்தேகநபர்கள் மன்னாரில் கடற்படையினரால் கைது

மன்னார் தாவுல்பாடு கடற்கரையில் 2025 மார்ச் 23ஆம் திகதி காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 402 கிலோவிற்கும் அதிகமான ஏலக்காய், 3781 ஷாம்பு பாக்கெட்டுக்கள் மற்றும் 51 அழகுசாதனப் பாக்கெட்டுக்கள் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற டிங்கி படகு ஒன்றுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

24 Mar 2025

இந்நாட்டு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகொன்று வடகடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 மார்ச் 17ஆம் திகதி இரவு, யாழ்ப்பாணம் நெடுந் தீவுக்கு அப்பால், மேற்கொண்ட சிறப்பு தேடல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகொன்றுடன் (01) இந்திய மீன்வர்கள் மூன்று (03) பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

18 Mar 2025