சேவா வனிதா பிரிவின் முன்னால் துனை தலைவி திருமதி குமாரி வீரசிங்கவின் பிரியாவிடை வைபவம்
கடற்படை சேவா வனிதா பிரிவின் முன்னால் துனை தலைவி திருமதி குமாரி வீரசிங்கவின் பிரியாவிடை வைபவம் 2021 மார்ச் 23 ஆம் திகதி சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் உஸ்வெடகெய்யாவ மாலிமா கிலப் ஹவுஸ் (Malima Club House) மண்டபத்தில் நடைபெற்றது.
கடற்படை இசைக்குழு மற்றும் கடற்படை கலாச்சார நடனக் குழுவினரின் பாடல் மற்றும் நடனம் மூலம் பிரியாவிடை வைபவம் வண்ணமயமானது. கடற்படை சேவா வனிதா பிரிவில் இருந்து வெளிச்செல்லும் சேவா வனிதா பிரிவின் முன்னால் துனை தலைவி திருமதி குமாரி வீரசிங்கவுக்கு கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவியால் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த பிரியாவிடை வைபவத்துக்காக சேவா வனிதா பிரிவின் புதிய துனை தலைவி, செயற்குழு உறுப்பினர்கள் உட்பட சேவா வனிதா பிரிவின் மூத்த மற்றும் இளைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

























