Sri Lanka Navy – Official Logo

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் மற்றும் மருந்துப் பொருட்களை புத்தளத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

11 Jun 2026

2026 ஜூன் 11 அன்று, இலங்கை கடற்படையால் புத்தளம் ஆலன்குடா கரையோர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்ட பீடி இலை மற்றும் மருந்துப் பொருட்களுடன் கூடிய ஒரு டிங்கி படகு (01), கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படையின் விஜய நிறுவனத்தினால், புத்தளம் ஆலன்குடா கரையோரப் பகுதியை அண்மித்த கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது மிதந்துகொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு (01) சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட 177 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள், சுமார் 354,000 மருந்து மாத்திரைகள், மருந்துக் களிம்புகள் அடங்கிய 7,673 பொதிகள், மருந்துப் பொருட்கள் அடங்கிய 118 போத்தல்கள் மற்றும் ஒரு டிங்கி படகு (01) ஆகியவை இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. மேலும், பீடி இலைகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் அடங்கிய இந்த சரக்கை கடத்தல்காரர்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த நிலையில், கடற்படையின் நடவடிக்கைகள் காரணமாக அதனை கைவிட்டு தப்பியோடியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், மருந்துப் பொருட்களின் தொகை மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Accessibility Tools