விளையாட்டு செய்திகள்
“PCC & Handgun Nationals 2025” தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டித்தொடர் வெலிசரவில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கையின் சர்வதேச நடைமுறை துப்பாக்கிச் சூடு கூட்டமைப்பு (International Practical Shooting Confederation - IPSC) ஏற்பாடு செய்த Pistol Caliber Carbine (PCC) மற்றும் Handgun Level III தேசிய துப்பாக்கிச் சூடு போட்டி, 2025 ஜூன் 18 முதல் 22 வரை வெலிசர கடற்படை கைத்துப்பாக்கிச் சூட்டு மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. விருது வழங்கும் விழா 2025 ஜூன் 22 ஆம் திகதி Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில் கௌரவ பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
07 Jul 2025
‘MAHAMERUWA RALLY CROSS – 2025’ பந்தயப் போட்டியில் மோட்டார் சைக்கிள் பிரிவில் கடற்படை வெற்றி பெற்றது

இலங்கை மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘MAHAMERUWA RALLY CROSS – 2025’ பந்தயப் போட்டி 2025 ஜூன் 29 அன்று கிரியுல்ல மகாமேருவ பாதையில் நடைபெற்றது, இதில் கடற்படை Standard 250CC மோட்டார் சைக்கிள் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
04 Jul 2025
கடற்படைத் தளத்தில் கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2025 வெற்றிகரமாக நிறைவடைந்தது

‘கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்-2025’ 2025 ஜூன் 27 முதல் 30 வரை கடற்படை தளத்தின் குத்துச்சண்டை மைதானத்தில் நடைபெற்றது, இதில் வடமேற்கு கடற்படை கட்டளை ஆண்களின் சாம்பியன்ஷிப்பையும், பயிற்சி கட்டளை பெண்களின் சாம்பியன்ஷிப்பையும் வென்றது.
03 Jul 2025
கட்டளைகளுக்கு இடையேயான கயிறு இழுத்தல் போட்டித் தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிறுவனத்தில் 2025 ஜூன் 14 அன்று கட்டளைகளுக்கு இடையேயான கயிறு இழுத்தல் போட்டித் தொடர் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இதில் மேற்கு கடற்படை கட்டளை ஆண்கள் சாம்பியன்ஷிப்பையும், வட மத்திய கடற்படை கட்டளை பெண்கள் சாம்பியன்ஷிப்பையும் வென்றது.
17 Jun 2025
26 வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் கடற்படை தடகள வீராங்கனை லக்ஷிமா மெண்டிஸ் உட்பட 4x400 அஞ்சலோட்ட அணி சொந்த நாட்டிற்காக வெண்கலப் பதக்கங்களை வென்றது

26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடர், 2025 மே 27 முதல் 31 வரை, “கொரியாவின் குமி” நகரத்தில் (Gumi, Korea) வெற்றிகரமாக நடைபெற்றன. குறித்த போட்டித் தொடரில் பெண்களுக்கான 4x400 மீட்டர் அஞ்சலோட்ட மற்றும் கலப்பு 4x400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை தடகள வீராங்கனை மற்றும் கடற்படை பெண் மாலுமி லக்ஷிமா மெண்டிஸ் உள்ளிட்ட அணிகள், போட்டிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கங்களை வென்றன.
12 Jun 2025
13வது பாதுகாப்பு சேவைகள் வூஷு சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

13வது பாதுகாப்பு சேவைகள் வூஷு போட்டித் தொடர் 2025 ஜூன் 2 முதல் 4 ஆம் திகதி வரை அம்பேபுஸ்ஸவில் உள்ள இலங்கை சிங்கப் படைப்பிரிவு உட்புற மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இதில் கடற்படையின் ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டாம் இடத்தைப் வென்றனர்.
09 Jun 2025
05th Mr. Master/Physique/Hercules 2025 உடற்கட்டமைப்பு போட்டியில் கடற்படைக்கு பல வெற்றிகள்

2025 மார்ச் 23 அன்று ஹோமாகம, மேல் மாகாணம், கொழும்பு SAPCE PARK பூங்காவில் நடைபெற்ற 05th Mr. Master/Physique/Hercules 2025 இந்தப் போட்டியில் கடற்படை உடற்கட்டமைப்பு அணிக்கு பல வெற்றிகளைப் பெற முடிந்தது.
26 Mar 2025
2024/2025 கழகங்களுக்கு இடையேயான மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

2024/2025 கழகங்களுக்கு இடையேயான மகளிர் ரக்பி போட்டித் தொடர் 2024 டிசம்பர் 28 முதல் 2025 மார்ச் 14 வரை நடைபெற்றதுடன், குறித்த போட்டித் தொடரில் 2025 மார்ச் 14ஆம் திகதி அன்று, CR&FC விளையாட்டுக் கழகத்துடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 61-05 என்ற கணக்கில் வீழ்த்தி, கழகங்களுக்கு இடையேயான மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது.
18 Mar 2025
பாதுகாப்புச் சேவை கடற்கரை கரப்பந்தாட்ட மகளிர் சாம்பியன்ஷிப்பை கடற்படை வென்றது

13வது பாதுகாப்புச் சேவைகள் கடற்கரை கரப்பந்து சாம்பியன்ஷிப் 2025 மார்ச் 12 முதல் 14 வரை கட்டுநாயக்க, இலங்கை விமானப்படை முகாமில் அமைந்துள்ள கடற்கரை கரப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றதுடன், இதில் கடற்படை வெற்றிப்பெற்றது.
15 Mar 2025
"தேசிய துப்பாக்கி சூட்டு போட்டித்தொடர் - 2025" புனேவயில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் முன்முயற்சியின் கீழ் மற்றும் தேசிய துப்பாக்கி சூட்டு சங்கத்தின் பங்களிப்புடன், "தேசிய துப்பாக்கி துப்பாக்கி சூட்டு போட்டித்தொடர் - 2025", 2025 மார்ச் 06 முதல் 08 வரை புனேவயில் உள்ள கடற்படை துப்பாக்கி சூட்டு தளத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடுவர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தா (ஓய்வு) தலைமையில் முப்படை தளபதிகளின் பங்களிப்புடன் போட்டித்தொடரின் பரிசளிப்பு விழா மிஹிந்தலை மாலிமா விடுதியில் நடைபெற்றது.
09 Mar 2025