2022 கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான தடகள போட்டித்தொடரின் வெற்றி பயிற்சி கட்டளைக்கு

2022 கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான தடகள போட்டித்தொடர் ஜூன் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றதுடன் தடகள போட்டித்தொடரின் வெற்றி பயிற்சி கட்டளை குழு வென்றது.

இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த நிகழ்வில் தடகள மற்றும் கள விளையாட்டு நிகழ்வுகளில் அனைத்து கடற்படை கட்டளைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். அதன்படி, சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய பயிற்சி கட்டளை 2022 கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான தடகள போட்டித்தொடரின் ஒட்டுமொத்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வெற்றியை பெற்றுள்ளதுடன் அதே நேரத்தில் வட மத்திய கடற்படை கட்டளை ஆண்கள் மற்றும் பெண்களின் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

இப்போட்டித்தொடரில், பெண்களுக்கான சுத்தியல் எறிதல் மற்றம் வட்டு எறிதல் போட்டிகளில் முறையே கடற்படை வீராங்கணி எல்.பீ.டப் திசரணி மற்றும் கடற்படை வீராங்கணி பி.ஏ.ஐ.எம்.பி பெரேரா இரண்டு புதிய இடை-கட்டளை சாதனையைப் படைத்தனர். 2022 கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான தடகள போட்டித்தொடரின் சிறந்த தடகள வீரருக்கான (ஆண்கள்) விருதை கடற்படை வீரர் டி.எம்.எஸ்.எஸ் திஸாநாயக்க வென்றதுடன் சிறந்த தடகள வீராங்கணிக்கான (பெண்கள்) விருதை கடற்படை வீராங்கணி ஜிபிஎச்பி தர்மசிறி பெற்றுள்ளார்.

கடற்படை விளையாட்டு வீர வீராங்கணிகளின் திறமைகளால் வண்ணமயமான 2022 கடற்படை கட்டளைகளுக்கு இடையிலான தடகள போட்டித்தொடரின் பிரதம அதிதியாக கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி உட்பட கடற்படையினரும் கலந்துகொண்டனர்.