நேபாளத்தில் நடைபெற்ற 2022 மவுண்ட் எவரெஸ்ட் சர்வதேச திறந்த டேக்வாண்டோ போட்டித்தொடரில் கடற்படை வீராங்கனை நிசன்சலா சந்தமாலி வெள்ளிப் பதக்கமொன்றை வென்றார்

நேபாளத்தின் புகாராவில் (Pokhara) நடைபெற்ற 03வது மவுண்ட் எவரெஸ்ட் சர்வதேச திறந்த டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டித்தொடர் 2022 யில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை தடகள வீராங்கனை நிசன்சலா சந்தமாலி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

நேபாளத்தின் புகாராவில் 2022 செப்டம்பர் 19 முதல் 28 வரை நடைபெற்ற டேக்வாண்டோ போட்டித்தொடரில், இலங்கை கடற்படை பெண் மாலுமி நிசன்சலா சந்தமாலி 62/67 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டார். அங்கு, 2022 செப்டம்பர் 24 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற கடற்படை தடகள வீராங்கனை நிசன்சலா சந்தமாலி கடற்படைக்கும் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார், மேலும் இந்த வெற்றி டேக்வாண்டோ உலகத் தரவரிசைக்கும் உதவும்.

கடற்படை தடகள வீராங்கனை நிசன்சலா சந்தமாலி 2017, 2018, 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் 62/67 கிலோ எடைக்கு கீழ் டேக்வாண்டோவில் தனது சாதனைகளுக்காக கடற்படை வண்ணங்களை வென்றுள்ளார். இவர், 2018 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலக ஆயுதப் படைகளின் டேக்வாண்டோ போட்டியிலும், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற 06 வது TIRAK சர்வதேச டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய திறமையான விளையாட்டு வீராங்கனை ஆவார்.

மேலும், கடற்படை விளையாட்டு வாரியத்தின் தலைவரான தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் கடற்படையில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கான பல உள்கட்டமைப்புகள், பயிற்சி வாய்ப்புகள் மற்றும் நலன்புரி-ஏற்பாடுகளை கடற்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதிகளை மூலதனமாக கொண்டு, கடற்படை விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்து வருகின்றனர்.