‘Intermediate Boxing Championship – 2022’ இல் கடற்படை பல வெற்றிகளை பெற்றுள்ளது

இலங்கை குத்துச்சண்டை சங்கம் ஏற்பாடு செய்த ‘Intermediate Boxing Championship – 2022 போட்டித்தொடர் 2022 ஒக்டோபர் 05 முதல் 08 வரை கொழும்பு ரோயல் கல்லூரி உள்ளக குத்துச்சண்டை அரங்கில் நடைபெற்றது, இதில் இலங்கை கடற்படை 02 தங்கப் பதக்கங்கள், 02 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 03 வெண்கலப் பதக்கங்களை வென்றது.

இந்த குத்துச்சண்டைப் போட்டிக்காக இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஆறு (06) எடைப் பிரிவுக்குட்பட்ட 15 வீரர்கள் கலந்துகொண்டனர்.

அங்கு 80 கிலோவிற்கு கீழ் எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் பீ.எஸ்.பீ தேசப்பிரியவும், 60 கிலோவிற்கு கீழ் எடைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் எம்.ஜி.பீ.கே.பீ தயாரத்னவும் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

இப்போட்டியில், 92 கிலோவுக்கு அதிகமான எடைப் பிரிவில் போட்டியிட்ட கடற்படை வீரர் பி.எச்.டி.சி டி சில்வா மற்றும் 51 கிலோவுக்கு குறைவான எடைப் பிரிவில் போட்டியிட்ட கடற்படை வீரர் கே.எம்.ஜி.ஜி. சதுரங்க ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். மேலும், கே.எம்.ஜி.ஜி. சதுரங்க போட்டியின் சிறந்த தோல்வியாளருக்கான கோப்பையையும் வென்றார்.

மேலும், 51 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் எஸ்.ஐ ரன்மல், 54 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் கே.எச். நவோத்திய மற்றும் 67 கிலோவுக்கு கீழ் எடைப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் பி.எம்.எம்.தீப்திவர்தன ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

கடற்படை விளையாட்டுச் சபையின் தலைவரான தற்போது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னேவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் விளையாட்டுத் துறையின் அபிவிருத்திக்கான மேற்கொள்ளப்படுகின்ற விசேட வேலைத்திட்டங்கள் கடற்படை வீரர்களுக்கு இவ்வாறான வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்க உதவுகிறது.