விளையாட்டு செய்திகள்
கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கிப் போட்டித்தொடர் வெலிசரையில் நிறைவடைந்தது
இலங்கை கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஹொக்கிப் போட்டித்தொடர் 2024 ஒக்டோபர் 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வெலிசரை இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிறுவன ஹொக்கி மைதானத்தில் இடம்பெற்றதுடன், இங்கு ஆண்களுக்கான இணைச் சம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படைக் கட்டளை மற்றும் பயிற்சிக் கட்டளை வென்றதுடன் பெண்கள் இணைச் சாம்பியன்ஷிப்பை மேற்கு கடற்படை கட்டளை மற்றும் தெற்கு கடற்படை கட்டளை வென்றது.
13 Oct 2024
இன்டர் கிளப் முதல்தர மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடரில் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் (சமிக்ஞை) என்.ஏ.எச்.டி சில்வா சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டார்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன்டர் கிளப் முதல் தர (TIRE B) மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் போட்டித்தொடர் 2024 செப்டெம்பர் 24 ஆம் திகதி முதல் 2024 ஒக்டோபர் 09 ஆம் திகதி வரை 12 கழகங்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது, இதில் இலங்கை கடற்படை அணி பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை வீரர் (சமிக்ஞை) என்.ஏ.எச்.டி சில்வா போட்டித்தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
13 Oct 2024


