கட்டளைகளுக்கு இடையேயான பூப்பந்து போட்டித்தொடர் - 2025 வெற்றிகரமாக முடிவடைந்தது
இலங்கை கடற்படைக்கு இடையேயான பூப்பந்து போட்டித்தொடரானது 2025 பெப்ரவரி 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை வெலிசறை, இலங்கை கடற்படைக் கப்பல் கெமுனு நிறுவனத்தில் உள்ள கமாண்டர் பராக்கிரம சமரவீர ஞாபகார்த்த உள்ளக உடற்பயிற்சி கூடத்தில் இடம்பெற்றதுடன், மேற்கு கடற்படைக் கட்டளை ஆண்கள் சம்பியன்ஷிப் மற்றும் பெண்களுக்கான பயிற்சித் தளபதி பட்டத்தை வென்றது.
பணிப்பாளர் நாயகம் மற்றும் நிதியியல் ரியர் அட்மிரல் மஞ்சுள திஸாநாயக்கவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஆண்கள் இரண்டாம் இடத்தைப் பயிற்சிக் கட்டளையும், பெண்களுக்கான இரண்டாம் இடத்தை வடக்கு கடற்படைக் கட்டளையும் வென்றதுடன், ஆண்களுக்கான புதிய பிரிவு சம்பியன்ஷிப்பை லெப்டினன்ட் கமாண்டர் ஜி.ஐ.டி.பி.எஸ் தர்மரத்னவும், அதன் இரண்டாம் இடத்தை பெண் மாலுமி கே.எம்.எஸ் குணதிலக்கவும், பெண்கள் புதிய பிரிவு சம்பியன்ஷிப்பை பெண் மாலுமி டி.டி.ஓ விமலரத்னவும், அதன் இரண்டாம் இடத்தை பெண் மாலுமி ஐ.ஆர் மதுவந்தியும் வென்றனர்.
திறந்த ஆண்கள் இரட்டையர் சம்பியன்ஷிப்பை கமாண்டர் கே.கே.ஆர் ரத்நாயக்க மற்றும் உடற்பயிற்சியாளர் டி.எம்.ஆர்.எம் பண்டார இரண்டாம் இடத்தை கமாண்டர் ஜே.ஏ.ன் டி சில்வா மற்றும் சப்-லெப்டினன்ட் எச்.ஓ.டி டி சில்வா ஆகியோர் வென்றதுடன், திறந்த மகளிர் இரட்டையர் பிரிவின் சம்பியன்ஷிப்பை அணித்தலைவர் பெண் உடற் பயிற்சியாளர் ஏ.ஜி.ஏ.சி விஜேரத்ன மற்றும் பெண் மாலுமி டி.டி.ஓ விமலரத்ன ஆகியோர் வென்றனர், இரண்டாம் இடத்தை பெண் உடற் பயிற்சியாளர் ஜி.ஜி.எஸ் தமயந்தி வென்றார்.
போட்டியின் திறந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் சம்பியன்ஷிப்பை சப்-லெப்டினன்ட் எச்.ஒ.டி டி சில்வாவும், அதன் இரண்டாம் இடத்தை பெண் உடற் பயிற்சியாளர் டி.எம்.ஆர்.எம் பண்டாரவும், திறந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் சம்பியன்ஷிப்பை பெண் உடற் பயிற்சியாளர் ஏ.ஜி.ஏ.சி விஜேரத்னவும், அதன் இரண்டாம் இடத்தை பெண் உடற் பயிற்சியாளர் ஜி.ஜி.எஸ் தமயந்தி ஆகியோர் வென்றனர்.
மேலும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் கமாண்டர் கே.எச்.கே.எம் அபேசூரிய மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் பி.எம்.எஸ்.பி பன்னேஹேக ஆகியோர் சம்பியன்ஷிப்பை வென்றனர், இரண்டாம் இடத்தை கமாண்டர் வ.ஏ.சி.பி விக்ரமாராச்சி மற்றும் கடற்படை வீரர் டி.ஜி.எஸ்.கே பண்டார ஆகியோர் பெற்றனர். பன்னேஹேக மற்றும் இரண்டாம் இடத்தை பிரதான கடற்படை வீரர் டி.ஜி.எஸ்.கே பண்டாரவும் வென்றனர்.
50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவில் கெப்டன் டி.பி.தீகக மற்றும் கமாண்டர் டி.எம்.ரத்னபால ஆகியோர் சம்பியன்ஷிப்பை வென்றனர், இரண்டாம் இடத்தை கமாண்டர் கே.எம்.தயானந்தா மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் கே.ஜி.எஸ்.பி விஜேரத்ன ஆகியோர் பெற்றனர். 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் லெப்டினன்ட் கமாண்டர் கே.ஜி.எஸ்.பி விஜேரத்ன சம்பியன்ஷிப்பை வென்றதுடன், இரண்டாம் இடத்தை கெப்டன் டி.பி தீகல பெற்றார்.
மேலும், கடற்படை கட்டளைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படை வீரர்கள் குழுவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.