05th Mr. Master/Physique/Hercules 2025 உடற்கட்டமைப்பு போட்டியில் கடற்படைக்கு பல வெற்றிகள்
2025 மார்ச் 23 அன்று ஹோமாகம, மேல் மாகாணம், கொழும்பு SAPCE PARK பூங்காவில் நடைபெற்ற 05th Mr. Master/Physique/Hercules 2025 இந்தப் போட்டியில் கடற்படை உடற்கட்டமைப்பு அணிக்கு பல வெற்றிகளைப் பெற முடிந்தது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் பிரபல உடற்கடமைப்பு விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் பலர் கலந்துகொண்ட இச்சுற்றுப்போட்டியில் 05th Mr. Master/ Physique/Hercules 2025 போட்டியில் 80 எடைப்பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியில் முதலாம் இடத்தை, என்.வி.ஏ.நாமரத்னவும், 65 எடைப்பிரிவில் இரண்டாம் இடத்தை டபிள்யூ.எம்.சி கருணாரத்னவும் 85+ எடைப்பிரிவில் இரண்டாம் இடத்தை கே.கே. துஷாந்தவும் 80 எடைப்பிரிவில் இரண்டாம் இடத்தை எச்.எம்.ஏ.வி. ஹெட்டியாராட்சியும் 70 எடைப்பிரிவில் மூன்றாம் இடத்தை எல்.பி.என்.எஸ்.கமகேவும் 75 எடைப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி மூன்றாம் இடத்தை டபிள்யூ.ஆர்.காவிந்தவும், 80 எடைப்பிரிவில் ஆர்.எம்.என்.ரத்நாயக்க மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.