26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடர், 2025 மே 27 முதல் 31 வரை, “கொரியாவின் குமி” நகரத்தில் (Gumi, Korea) வெற்றிகரமாக நடைபெற்றன. குறித்த போட்டித் தொடரில் பெண்களுக்கான 4x400 மீட்டர் அஞ்சலோட்ட மற்றும் கலப்பு 4x400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை தடகள வீராங்கனை மற்றும் கடற்படை பெண் மாலுமி லக்ஷிமா மெண்டிஸ் உள்ளிட்ட அணிகள், போட்டிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கங்களை வென்றன.