கடற்படைத் தளத்தில் கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - 2025 வெற்றிகரமாக நிறைவடைந்தது

‘கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்-2025’ 2025 ஜூன் 27 முதல் 30 வரை கடற்படை தளத்தின் குத்துச்சண்டை மைதானத்தில் நடைபெற்றது, இதில் வடமேற்கு கடற்படை கட்டளை ஆண்களின் சாம்பியன்ஷிப்பையும், பயிற்சி கட்டளை பெண்களின் சாம்பியன்ஷிப்பையும் வென்றது.

அதன்படி, கடற்படை கட்டளைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல விளையாட்டு வீர வீராங்கனைகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், வடமேற்கு கட்டளை ஐந்து (05) தங்கப் பதக்கங்களையும் ஒரு (01) வெண்கலப் பதக்கத்தையும் வென்று ஆண்களின் சாம்பியன்ஷிப்பை வென்றதுடன், அதே நேரத்தில் பயிற்சி கட்டளை ஐந்து (05) தங்கப் பதக்கங்கள், ஒரு (01) வெள்ளிப் பதக்கம் மற்றும் நான்கு (04) வெண்கலப் பதக்கங்களை வென்று பெண்களின் சாம்பியன்ஷிப்பை வென்றது.

ஆண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட வடமேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த ஓடினரி சீமன் டப்ஆர்ஜிஎம்கே வீரசிங் போட்டியின் சிறந்த வீரருக்கான கோப்பையை வென்றார், அதே நேரத்தில் 54 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட வடக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த பெண் பயிற்சி மாலுமி எஸ்டி ஹீனடிகல சிறந்த வீராங்கனைக்கான கோப்பையை வென்றார்.

மேலும், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவின் தலைமையில் கட்டளைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசு வழங்கும் விழா நடைபெற்றதுடன், இந்த சந்தர்ப்பத்தில் கடற்படை குத்துச்சண்டை குழுமத்தின் செயலாளர் கொமாண்டர் எஸ்எம்எல்பி சகலசூரிய மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த அதிகாரிகளும் மாலுமிகளும் கலந்து கொண்டனர்.