Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

கடற்படையினரால் ஏற்பாடுச் செய்யப்பட்ட இரத்த தானத்திட்டங்கள்

21 May 2026

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி ஒன்று (01) 2026 மே 19 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

கடற்படைத் தளபதியின் கருத்துக்கமைய, வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதியின் பணிப்புரையின் பேரில், தேசிய போர்வீரர் நினைவு தினம் மற்றும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலை மற்றும் வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கிகளின் ஒருங்கிணைப்புடன் இந்த இரத்ததான நிகழ்வு வடமத்திய கடற்படை கட்டளை வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

மேலும், இந்த மாபெரும் சமூக நிகழ்வை வெற்றியடையச் செய்வதற்கு வடமத்திய கடற்படை கட்டளையின் பெருமளவிலான கடற்படையினர் தன்னார்வமாக முன்வந்து பங்களித்தனர்.

Accessibility Tools