EVENT NEWS › 2026

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றிற்காக கடற்படையின் பிரதம அதிகாரியைச் சந்தித்தனர்

19 Oct 2026

அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய விண்வெளிப் படையின் (U.S. Space Forces Pacific – SPACEPAC) பாதுகாப்பு ஒத்துழைப்புப் பிரிவின் பிரதானியான Lieutenant Colonel Shumpei Fujimura உள்ளிட்ட இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் இராஜதந்திரப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர், உத்தியோகபூர்வ சந்திப்பொன்றிற்காக இன்று (2026 ஒக்டோபர் 19) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் ரவீந்திர திஸேராவைச் சந்தித்தனர்.

இதன்போது, விண்வெளி தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துதல், இராணுவ உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் விண்வெளி ஒத்துழைப்பு தொடர்பாக இரு தரப்பினருக்கும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின்போது கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

Accessibility Tools