Sri Lanka Navy – Official Logo

இலங்கைக்கு தெற்கே அவுஸ்திரேலிய கடற்பகுதியில் ஆபத்தில் சிக்கி மீட்கப்பட்ட 25 இந்தோனேசிய மீனவர்களை கரைக்குக் கொண்டுவர கடற்படை உதவி

25 Sep 2026

இலங்கைக்கு தெற்கே, அவுஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்புப் பிராந்தியத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான KM ‘GARUDA JAYA VI’ என்ற இந்தோனேசிய மீன்பிடிப் படகில் இருந்த 25 இந்தோனேசியப் பிரஜைகள் MV MOONSTONE கப்பலினால் மீட்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு மீட்கப்பட்டவர்களை, கொழும்பு கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், மேலதிக நடவடிக்கைகளுக்காக கரைக்கு அழைத்து வர 2026 செப்டம்பர் 24 ஆம் திகதி இரவில் கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இலங்கைக்கு தெற்கே, அவுஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்புப் பிராந்தியத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது, இந்த இந்தோனேசிய மீன்பிடிப் படகு 2026 செப்டம்பர் 22 ஆம் திகதி கடலில் கவிழ்ந்ததில், அதில் இருந்த இந்தோனேசியப் பிரஜைகள் ஆபத்தில் சிக்கியுள்ளனர்.

ஆபத்தில் சிக்கிய இந்தோனேசியர்களில் 25 பேர் MV MOONSTONE கப்பலினால் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை ஒப்படைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கொழும்பு கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அந்த கப்பல் மூலம் அறிவிக்கப்பட்டது. இதற்கு உடனடியாகப் பதிலளித்த கடற்படையினர், கொழும்பு கடற்படை தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வருவதற்காக இரண்டு (02) கடற்படைக் படகுகளை அனுப்பி வைத்தனர்.

இதற்கமைய, MV MOONSTONE படகு மூலம் அழைத்து வரப்பட்ட 25 இந்தோனேசியப் பிரஜைகளும் கடற்படைக் கப்பல் ஒன்றின் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர்களுக்குத் தேவையான மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக இந்தோனேசிய தூதரகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Accessibility Tools