Sri Lanka Navy – Official Logo
SPORT NEWS 2026

(Navy Monthly Medal Golf Championship – May 2026) வெற்றிகரமாக நிறைவடைந்தது

26 May 2026

கடற்படை கோல்ப் கழகத்தால் எட்டாவது (08) முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட (Navy Monthly Medal Golf Championship – May 2026), வெலிசறை கோல்ப் மைதானத்தில் 2026 மே 24 அன்று வெற்றிகரமாக நடைபெற்றதுடன், வெற்றியாளர்களுக்கு மேற்கு கடற்படை கட்டளையின் தளபதியும் கடற்படை கோல்ப் கழகத்தின் தலைவருமான ரியர் அட்மிரல் ஜகத் குமார பரிசுகளை வழங்கினார்.

அதன்படி, கடற்படை வீரர்களிடையே விளையாட்டுத்திறன், உடல் தகுதி ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டியின் ஒட்டுமொத்த ஆண்கள் சாம்பியன்ஷிப், Net winner மற்றும் Gross Winner கோப்பைகளை வானொலி தொழில்நுட்ப வல்லுநர் டப்எம்எஸ்எம் வன்னிநாயக்கவும், ஒட்டுமொத்த பெண்கள் சாம்பியன்ஷிப்பை கடற்படை பெண் மாலுமி ஏஎம் உமயங்கனியும் வென்றனர்.

மேலும், இந்தப் போட்டியில், Net runner up மற்றும் Gross runner up கோப்பைகளை லெப்டினன்ட் கமாண்டர் எம்பிஎச் பெரேராவும், Nearest to the pin கோப்பையை கடற்படை பெண் மாலுமி ஏஎம் உமயங்கனியும், Longest Drive கோப்பையை வானொலி தொழில்நுட்ப வல்லுநர் டப்எம்எஸ்எம் வன்னிநாயக்கவும், Best Player கோப்பையை லெப்டினன்ட் கமாண்டர் (ஓய்வு) எச்எம் உடவத்தேவும் வென்றனர்.

Accessibility Tools