‘Sandy Bay Cup Golf Tournament - 2026” திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவுற்றது
கடற்படை கோல்ப் சங்கத்தினால் மூன்றாவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட ‘Sandy Bay Cup Golf Tournament - 2026” திருகோணமலை சாண்டி பே கோல்ப் மைதானத்தில் 2026 ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் வெற்றிகரமாக நடைபெற்றதோடு, வெற்றியாளர்களுக்கான பரிசில்களை கடற்படை பிரதி தலைமை அதிகாரியும் கிழக்கு கடற்படைக்கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே வழங்கி வைத்தார்.
இதற்கமைய, கடற்படை வீரர்களிடையே விளையாட்டுத்திறன், உடற்தகுதி மற்றும் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டித்தொடரின் Longest Drive மற்றும் Novices Winner ஆகிய இரண்டு கிண்ணங்களை ரேடியோ மெக்கானிக் டிஎம்எஸ்ஐ குணவர்தன வென்றெடுத்ததுடன், Nearest to the pin கிண்ணத்தை ரேடியோ மெக்கானிக் டபிள்யூஎம்எஸ்என் வன்னினாயக்க வென்றெடுத்தார்.
Net Runners Up மற்றும் Sandy Bay Cup Winner ஆகிய இரண்டு கிண்ணங்களை லீடிங் பிசிகல் இன்ஸ்டிரக்டர் யூகேஎஸ் மதுஷங்கவும், Net Winner கிண்ணத்தை கெப்டன் ஜேஎச்ஐடி ஜயவர்தனவும், Gross Runners Up கிண்ணத்தை ஏபல் சீமன் கேபிசிஆர் குமாரவும், Net Winner (Retired) கிண்ணத்தை லெப்டினன்ட் கமாண்டர் ஆர்எம்ஆர்சி ரத்னாயக்கவும் வென்றெடுத்தனர்.
மேலும், இதன் பரிசளிப்பு விழாவில் கடற்படை கோல்ப் சங்கத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஜகத் குமார மற்றும் கடற்படை கோல்ப் சங்கத்தின் செயலாளர் கொமடோர் எம்ஏடிடிஎம் பியதிலக்க உள்ளிட்ட கடற்படை வீரர்கள் கலந்துகொண்டனர்.