தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்திற்கான கடற்படை ஆதரவு
'க்ளீன் ஶ்ரீ லங்கா' செயலகம், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் சுற்றுச்சூழல் காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து, 2026 ஜூலை 05 முதல் 12 ஆம் திகதி வரை செயல்படுத்தப்படும் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்குக் கடற்படை தீவிரமாகப் பங்களித்து வருகிறது.
இந்த டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்களின் கீழ், 'டெங்கு நோயற்ற கொழும்பு நோக்கிய' (Towards a Dengue-Free Colombo) எனும் தொனிப்பொருளுக்கு அமைய, கொழும்பு மாவட்டத்தின் முகத்துவாரம், மட்டக்குளி, பொரள்ளை வநாதமுல்ல, பாணந்துறை, நாரஹேன்பிட்டி, மஹர மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகங்களுடன் இணைந்து, மேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் குழுவொன்று பங்கேற்றது.
மேலும், இதற்கு இணையாக கடற்படையின் ஏனைய கடற்படை கட்டளைகளினாலும் டெங்கு ஒழிப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இதன்போது சூழல் தொகுதிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தூய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு மேலதிகமாக, கடற்படை முகாம் வளாகங்களுக்குள்ளும் பல டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், கொடிய டெங்கு ஆபத்தை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்தகைய திட்டங்களுக்கு கடற்படை வீரர்கள் தொடர்ச்சியாகத் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
Dengue Prevention Campaign
2026 ஜூலை 05 ஆம் திகதி பொரளை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையினர் தனது பங்களிப்பை வழங்கினர்
2026 ஜூலை 05 ஆம் திகதி மஹர பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையினர் தனது பங்களிப்பை வழங்கினர்
2026 ஜூலை 05 ஆம் திகதி மட்டக்குளி பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையினர் வீரர்கள் தனது பங்களிப்பை வழங்கினர்
2026 ஜூலை 05 ஆம் திகதி பாணந்துறை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையினர் தனது பங்களிப்பை வழங்கினர்
2026 ஜூலை 05 ஆம் திகதி வத்தளை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையினர் தனது பங்களிப்பை வழங்கினர்
2026 ஜூலை 05 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையினர் தனது பங்களிப்பை வழங்கினர்
2026 ஜூலை 05 ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையினர் தனது பங்களிப்பை வழங்கினர்
2026 ஜூலை 05 ஆம் திகதி வட கடற்படை கட்டளையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையினர் தனது பங்களிப்பை வழங்கினர்
2026 ஜூலை 05 ஆம் திகதி தென் கடற்படை கட்டளையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படையினர் தனது பங்களிப்பை வழங்கினர்