Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுஜீவ வீரசூரிய கடமைகளைப் பொறுப்பேற்றார்

30 Jul 2026

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் சுஜீவ வீரசூரிய, இன்று (2026 ஜூலை 30) தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

பாரம்பரிய கடற்படை மரபுகளுக்கு அமைவாக புதிய தளபதி தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, அக் கட்டளையின் தளபதியாகப் பணியாற்றிய ரியர் அட்மிரல் நிமால் ரணசிங்க கட்டளைத் தலைமையகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகப் பொறுப்புகளைக் கையளித்தார்.

Accessibility Tools