Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

கடற்படை ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் நிறுவப்பட்ட ஓட்டுநர் சிமுலேட்டர் திறக்கப்பட்டது

18 Jun 2026

இலங்கை கடற்படை ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெறும் மாலுமிகளுக்கு நடைமுறை மற்றும் விரிவான அறிவை ஒரு பாதுகாப்பான சூழலில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, பாதுகாப்பு அமைச்சகத்தின் 'பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம்' (CDRD) உள்நாட்டிலேயே உருவாக்கிய சமீபத்திய (B Vehicle Simulator), கடற்படைத் தளபதிகயான வைஸ் அத்மிரல் கான்சன பாகொடவின் தலைமையில், 2026 ஜூன் 17 அன்று வெலிசறை கடற்படை ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி, (Steering), (Accelerator, Brake, Clutch), ஒரு உண்மையான வாகனத்தில் காணப்படும் பக்கவாட்டுக் கண்ணாடிகள், கைமுறை மற்றும் தானியங்கி கியர் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாட்டு அமைப்புகளையும் இது கொண்டுள்ள, ஹைட்ராலிக் அல்லது மின்சார ஆக்சுவேட்டர்களைப் (actuators) பயன்படுத்தி ஆறு (06) திசைகளில் நகர்த்தக்கூடிய ஒரு இயந்திர மேடையிலிருந்து (Steering மேடை) வாகனத்தை ஓட்டும்போது, திருப்பங்கள், பிரேக்கிங், மேடு பள்ளங்கள் மற்றும் சீரற்ற சாலை நிலைமைகளை அனுபவிக்கும் வாய்ப்பு பயிற்சியாளர்களுக்கு உள்ளது.

மேலும், இந்நிகழ்வில் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி, கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Accessibility Tools