Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

ஆஸ்திரேலிய பாதுகாப்பு நிறுவன பிரதிநிதிகள் குழு கடற்படை தலைமையகத்திற்கு விஜயம்

08 Sep 2026

இலங்கையில் கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பாதுகாப்பு நிறுவனத்தின், கர்னல் Adam Geoffrey McGuinness தலைமையில் மற்றும் அந்த நிறுவனத்தின் பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் மூலோபாய ஆய்வு பாடநெறியைப் பயிலும் மாணவர் அதிகாரிகளைக் கொண்ட பிரதிநிதிகள், இன்றைய தினம் (2026 செப்டம்பர் 08) கடற்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இவ்விஜயத்தின் போது கர்னல் Adam Geoffrey McGuinness உள்ளிட்ட ஆஸ்திரேலிய பாதுகாப்பு நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவை சந்தித்தனர். அங்கு பயிற்சித் துறை தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை கட்டளை மற்றும் மூலோபாய ஆய்வு பாடநெறியைப் பயிலும் மாணவர் அதிகாரிகளைக் கொண்ட பிரதிநிதிகள், கடற்படையின் பங்கு மற்றும் நீரளவியல் வசதிகள் தொடர்பான விரிவுரை ஒன்றிலும் கடற்படை தலைமையகத்தில் கலந்துகொண்டனர்.

மேலும், இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் Amanda Johnston கலந்துகொண்டதுடன், இவ் உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் கடற்படை தளபதிக்கும் ஆஸ்திரேலிய தூதுக்குழுப் பிரதானிக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

Accessibility Tools