“Navy Commander’s Cup - 2026” கோல்ப் போட்டித் தொடர் திருகோணமலையில் உள்ள செண்டிபே மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை கடற்படை கோல்ப் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “கடற்படைத் தளபதியின் கோப்பை - 2026” கோல்ப் போட்டித் தொடரானது, 2026 ஜூன் 21 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள செண்டிபே கோல்ப் மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் தலைமையில் வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
அதன்படி, முப்படைகளின் உறுப்பினர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளிடையே விளையாட்டு மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட “Navy Commander’s Cup -2026” கோல்ப் மைதானத்தில், Navy Commander’s Cup Winner, Gross Winner மற்றும் Nett Winner கோப்பையை கெப்டன் துஷார மஹேஷ் மூலமும், Nearest to the Pin கோப்பையை கொமடோர் மஞ்சுள பியதிலக வினாலும், Longest Drive கோப்பையை லெப்டினன்ட் கமாண்டர் ஹர்ஷ உடவத்த (ஓய்வு) வினாலும், Nett Runner-up கோப்பையை கெப்டன் துஷார ஜெயவர்தன வினாலும், Gross Runner-up கோப்பையை ரியர் அட்மிரல் ஜகத் குமார, மற்றும் Novices கோப்பையை கமாண்டர் ருவன் ஜெயதிலக ஆகியோரும் வென்றனர்.
மேலும், ஓய்வுபெற்றோர் பிரிவில் Nett Winner கோப்பையை கெப்டன் ஜெயலத் பெரேரா (ஓய்வுபெற்றவர்) அவர்களும், Nett Runner-up கோப்பையை கொமடோர் கமல் பொம்புகலகே (ஓய்வு) இனாலும் வென்றனர்.