‘Puttalam Motor Rush Championship - 2026’ மோட்டார் பந்தயப் போட்டித் தொடரின் மோட்டார் சைக்கிள் பிரிவில் கடற்படை பல வெற்றிகளைப் பெற்றுள்ளது
புத்தளம் மோட்டார் ரேசிங் கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘Puttalam Motor Rush Championship - 2026’ போட்டித் தொடர், நாட்டின் முன்னணி அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களின் பங்கேற்புடன் 2026 ஜூன் 07 ஆம் திகதி புத்தளம் பந்தயப் பாதையில் நடைபெற்றது. இதில் மோட்டார் சைக்கிள் பிரிவில் பல்வேறு வெற்றிகளைப் பெற்று, கடற்படையின் அதிவேக மோட்டார் சைக்கிள் அணியைச் சேர்ந்த வீரர்கள் சிறப்பான சாதனையைப் பதிவு செய்தனர்.
மோட்டார் சைக்கிள் பிரிவின் பத்தொன்பது (19) போட்டி நிகழ்வுகளைக் கொண்ட இத்தொடரில், கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி எட்டு (08) வீரர்கள் பங்கேற்றனர். அதில், Standard 250 cc போட்டியில் மூன்றாம் இடத்தை தலைமை உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் இஏபிஎன் எதிரிசிங்க பெற்றார். Standard 125 cc Event II போட்டியில் மூன்றாம் இடத்தை கேஎச்சி குணவர்தன பெற்றார். Standard 125 cc Event I போட்டியில் நான்காம் இடத்தை தலைமை பொறியியல் தொழில்நுட்ப நிபுணர் கேஎச்சி குணவர்தன பெற்றார். Racing 250 cc போட்டியில் ஐந்தாம் இடத்தை பெடி ஓபிசர் டிஎம்எஸ்எஸ் குமார பெற்றார். மேலும், Standard 125 cc Event II போட்டியில் ஐந்தாம் இடத்தை தலைமை சமையலாளர் எச்ஏகே சாமர பெற்றார்
மேலும், Super Motard Race-03 போட்டியில் மூன்றாம் இடத்தையும் Super Motard Race-02 போட்டியில் நான்காம் இடத்தையும், தலைமை பொறியியல் தொழில்நுட்ப நிபுணர் எம்விடப்பி கருணாரத்ன பெற்றார்.