கடற்படையின் புதிய பதில் செயற்பாடுகளின் பணிப்பாளர் நாயகமாக கொமடோர் சமின்த கருணாசேன கடமைகளைப் பொறுப்பேற்றார்
இலங்கை கடற்படையின் புதிய பதில் செயற்பாடுகளின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட கொமடோர் சமின்த கருணாசேன, இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 28) கடற்படைத் தலைமையகத்தில் தனது பதவிக்கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.
இதன்படி, கடற்படை செயற்பாடுகளின் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றிய ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வாவினால் கொமடோர் சமின்த கருணாசேனவிடம் கடற்படைத் தலைமையகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகப் பதவிக்கடமைகள் ஒப்படைக்கப்பட்டதுடன், ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா மேற்கு கடற்படைப் பிராந்தியக் கட்டளைத்தளபதியாக எதிர்காலத்தில் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
1 /
6