Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

கடற்படையின் உயரிய மரியாதையுடன் 26 வது கடற்படைத் தளபதி அட்மிரல் கான்சன பானகொட கடற்படைச் சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

01 Jul 2026

இலங்கை கடற்படையின் 26 ஆவது கடற்படைத் தளபதியாக 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி முதல் பணியாற்றிய அட்மிரல் கான்சன பானகொட அவர்கள், 36 ஆண்டுகளுக்கும் மேலான தனது கடற்படைச் சேவையை நிறைவு செய்து, இன்று (2026 ஜூலை 1) ஓய்வு பெற்றார்.

அதன்படி, இன்று (2026 ஜூலை 1) காலை, கடற்படை மரபின்படி கடற்படைத் தளபதி பதவியின் பொறுப்புகளை புதிய கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து, கடற்படை மரபின்படி அவருக்கு சிறப்பு மரியாதை அணிவகுப்பின் மூலம் உயரிய இராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.

புதிய கடற்படைத் தளபதி, கடற்படை நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் வழியனுப்பலுக்குப் பின்னர், கடற்படை வாகன அணிவகுப்பில் கடற்படை தலைமையகத்திலிருந்து ஓய்வுப் பெற்ற 26 வது கடற்படைத் தளபதி புறப்பட்டுச் செல்லும் வேளையில், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படை வீரர்கள் இருபுறமும் அணிவகுத்து நின்று, கடற்படை மரபின்படி வாழ்த்துகளையும் பிரியாவிடையையும் மரியாதையுடன் தெரிவித்தனர்.

Accessibility Tools