Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

கடற்படை தளபதி கௌரவ பிரதமரை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்

16 Jul 2026

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, உத்தியோகபூர்வ சந்திப்பொன்றிற்காக இன்று (2026 ஜூலை 16) பிரதமர் அலுவலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.

பாரம்பரியமிக்க இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கை கடற்படையின் 27 வது கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமைக்காக கௌரவ பிரதமர் அவர்கள், கடற்படை தளபதிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் நாட்டின் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை கடற்படை ஆற்றும் தனித்துவமான பங்களிப்பு குறித்து இரு தரப்பினருக்கும் இடையே சுமூகமான மற்றும் பயனுள்ள கருத்துப் பரிமாற்றமும் இடம்பெற்றது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், கடற்படை தளபதியினால் கௌரவ பிரதமர் அவர்களுக்கு நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

புகைப்படம் - பிரதமரின் ஊடகப் பிரிவு

Accessibility Tools