Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியை சந்தித்தார்

22 Jul 2026

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் எம். ஆனந்த் (M Anand), உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக இன்று (2026 ஜூலை 22) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவைச் சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, 27 ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவிற்கு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் நட்பு ரீதியான உரையாடலில் ஈடுபட்டார்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுக் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

Accessibility Tools