Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

'டெங்கு இல்லாத கொழும்பை நோக்கிய' தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு கடற்படையினரின் தீவிர பங்களிப்பு

10 Jul 2026

டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி” (Towards a Dengue-Free Colombo) எனும் தொனிப்பொருளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத் தொடரின் ஐந்தாவது நாளான 2026 ஜூலை 10 ஆம் திகதி ஆறாம் நாளில் கடற்படையினர் தங்களது தீவிர பங்களிப்பை வழங்கி 'க்ளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை காவல்துறையின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இத்தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது, டெங்கு நோய் பரவலைக் குறைப்பதையும் மக்கள் மத்தியில் சுகாதாரப் பாதுகாப்புமிக்க சூழலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

சுகாதார மருத்துவ அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுடன் இணைந்து, மேற்கு கடற்படைக் கட்டளைக்கு அணுசரணையான அறுபத்தைந்து (65) கடற்படைப் படைவீரர்கள் இத்தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்காகப் பங்களிப்பு வழங்கினர். அதற்கமைய மோதறை, பொரள்ளை, கோட்டை, புறக்கோட்டை, பாணந்துறை, மகர மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளில் அறுபத்தொன்று (61) இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அங்கு டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய ஆயிரத்து அறுநூற்று எழுபத்தொரு (1,671) இடங்கள் அடையாளம் காணப்பட்டன. மேலும், டெங்கு ஒழிப்பு செயல்முறை குறித்த எண்பத்திரண்டு (82) விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் இந்த பரந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டன.

மேலும், இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களின் ஊடாக சுற்றுச்சூழல் முறையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, டெங்கு கொசுக்கள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றைச் சுத்திகரிக்கும் மற்றும் அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு இணையாக, இலங்கை கடற்படையின் ஏனைய கட்டளைகளின் மூலமும், கடற்படை முகாம்களை டெங்கு நுளம்புகள் அற்ற பாதுகாப்பான வலயங்களாக மாற்றுவதற்காக தொடர்ச்சியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மேலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Accessibility Tools