கடற்படைத் தளபதி அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ ஜனாதிபதி, ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியுமான அனுர குமார திசாநாயக்க, கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை இன்று (30 ஜூன் 2026) முதல் அட்மிரல் பதவிக்கு உயர்த்தினார்.
2024 டிசம்பர் 31 ஆம் திகதி இலங்கை கடற்படையின் 26ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, அட்மிரல் பதவிக்கு உயர்வு பெற்றதைத் தொடர்ந்து, கடற்படை மரபின்படி கடற்படைத் தளபதிக்கு வழங்கப்படும் சிறப்பு மரியாதை அணிவகுப்பின் மூலம் உயரிய இராணுவ மரியாதை இன்று (2026 ஜூன் 30) கடற்படை தலைமையகத்தில் வழங்கப்பட்டது.
1 /
6