Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS SHARDA’ கப்பல், செயல்பாட்டு தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் இலங்கைக்கு வருகை தந்தது

10 Jun 2026

இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SHARDA’ 2026 ஜூன் 10 ஆம் திகதி சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.

இவ்வாறு தீவை வந்தடைந்த Offshore Patrol Vessel (OPV) வகைக்குரிய ‘INS SHARDA’ என்ற கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் Kartik Sachdeva கடமையாற்றுகின்றார்.

மேலும், கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ள இந்தியக் கடற்படைக் கப்பலான ‘INS SHARDA’ தீவில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் குழுவினர் இலங்கைக் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், தீவின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர்.

Accessibility Tools