Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

வெற்றித் தினத்தை முன்னிட்டு மிஹிந்து செத் மெதுரவில் போர்வீரர்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்தித்தார்

22 May 2026

வெற்றித் தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) 19 மே ஆம் திகதி அத்திடியவில் அமைந்துள்ள மிஹிந்து செத் மெதுரவிற்கு விஜயம் செய்தார்.

இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதியுடன் அங்கு சென்ற பாதுகாப்பு பிரதி அமைச்சர், பல தசாப்தங்களாக நீடித்த ஆயுத மோதலின் போது கடுமையான காயங்களுக்கு உள்ளாகி மாற்றுத் திறனாளிகளாக அங்கு தங்கியிருக்கும் போர்வீரர்களுடன் நேரம் செலவிட்டார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அங்கு தங்கியிருப்போருடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை கவனமாகக் கேட்டறிந்ததுடன், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ, புனர்வாழ்வு மற்றும் ஆதரவு சேவைகள் தொடர்பிலும் தேடிப்பார்த்தார். போர்வீரர்களின் துணிவிற்கு தனது ஆழ்ந்த பாராட்டை தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவும் உதவியும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும், மாற்றுத் திறனாளி போர்வீரர்களின் பராமரிப்பு மற்றும் புனர்வாழ்விற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் மிஹிந்து செத் மெதுர பணியாளர்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். சமூகத்தின் மதிப்புமிக்க அங்கத்தினர்களாகிய இந்த வீரர்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் அவர்களுக்கு உரிய கௌரவத்துடனும் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யும் பணியாளர்களின் முன்மாதிரியான சேவையையும் அவர் பாராட்டினார்.

இந்நிகழ்வில் இராணுவ பிரதம அதிகாரி உட்பட சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் மிஹிந்து செத் மெதுர பணியாளர்களும் கலந்துகொண்டனர்.

ஊடக ஆதரவு - https://www.defence.lk/

Accessibility Tools