Sri Lanka Navy – Official Logo
SPORT NEWS 2026

Intermediate boxing tournament - 2026 கடற்படை குத்துச்சண்டை அணி அரிய திறமைகளை வெளிப்படுத்தியது

23 Jul 2026

இலங்கை குத்துச்சண்டை சம்மேளனம் நடத்திய (Intermediate Boxing Tournament - 2026) போட்டியில் கடற்படை அணி பல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. தியகம சர்வதேச விளையாட்டு வளாகத்தின் குத்துச்சண்டை அரங்கில் ஜூலை 15 முதல் 19 வரை நடைபெற்ற இப்போட்டியில் கடற்படை வீரர்கள் திறம்பட செயல்பட்டு பல பதக்கங்களை வென்றனர்.

இதற்கமைய, நாட்டின் புகழ்பெற்ற 27 குத்துச்சண்டை அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏராளமான வீரர்கள் பங்குபற்றிய இப்போட்டியில், கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 எடைப் பிரிவுகள் மற்றும் பெண்களுக்கான 07 எடைப் பிரிவுகளின் கீழ் 35 வீரர்கள் பங்கேற்றனர். இதில், 90 கிலோகிராமிற்கு மேற்பட்ட எடைப் பிரிவில் சாதாரண கடற்படை வீரர் ஏபல் சீமன் பிஎச்டிசி த சில்வா, 70 கிலோகிராமிற்கு குறைந்த எடைப் பிரிவில் ஓடினரி சீமன் (பெண்) வீராங்கனை இகேடி ஆரியவன்ஷ, 80 கிலோகிராமிற்கு மேற்பட்ட எடைப் பிரிவில் ஓடினரி சீமன் (பெண்) வீராங்கனை கேஏஐடி நதாசி மற்றும் 51 கிலோகிராமிற்கு குறைந்த எடைப் பிரிவில் பயிற்சி பெண் கடற்படை வீராங்கனை பிஎம்ஆர்எல் தேஷ்ப்பிரிய ஆகியோர் 04 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

மேலும், இப்போட்டியில் 70 கிலோகிராமிற்கு குறைந்த எடைப் பிரிவில் லீடிங் பெற்றமன் பிஎம்எம் தீப்திவர்தன, 75 கிலோகிராமிற்கு குறைந்த எடைப் பிரிவில் லீடிங் போஸ்ட் எச்எம்எஸ்பி ஆரியரத்ன, 65 கிலோகிராமிற்கு குறைந்த எடைப் பிரிவில் ஓடினரி சீமன் (பெண்) வீராங்கனை எஸ்டி ஹீனட்டிகல மற்றும் 57 கிலோகிராமிற்கு குறைந்த எடைப் பிரிவில் ஓடினரி சீமன் (பெண்) வீராங்கனை பிஏகேஎன் குமாரி ஆகியோர் 04 வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.

அத்துடன், 90 கிலோகிராமிற்கு மேற்பட்ட எடைப் பிரிவில் லெப்டினன்ட் எல்எஸ்ஆர் த சில்வா, 90 கிலோகிராமிற்கு குறைந்த எடைப் பிரிவில் லீடிங் இலக்ரிகல் மெகெனிக் எம்எம்டி குமார, 85 கிலோகிராமிற்கு குறைந்த எடைப் பிரிவில் ஏபல் சீமன் எச்என்கே விஷ்வநாத், 60 கிலோகிராமிற்கு குறைந்த எடைப் பிரிவில் ஓடினரி சீமன் (பெண்) வீராங்கனை டிஜிடிடிஎஸ் ஆரியரத்ன மற்றும் 60 கிலோகிராமிற்கு குறைந்த எடைப் பிரிவில் பயிற்சி கடற்படை வீரர் எம்எம்பிஎன் மாபா ஆகியோர் 05 வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.

மேலும், இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அனுருத்த ஷானக பண்டார, கடற்படை விளையாட்டுப் பணிப்பாளர் கொமடோர் இந்திக எதிரிசிங்க மற்றும் கடற்படை குத்துச்சண்டை மன்றத்தின் தலைவர் கொமடோர் அர்ஜுன பெரேரா உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் முப்படை வீர்ர்களும் கலந்து கொண்டனர்.

Accessibility Tools