Sri Lanka Navy – Official Logo

சட்டவிரோதமாக கடல் வழியே கொண்டுவரப்பட்ட 14,000 க்கும் மேற்பட்ட கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் சட்டத்தின் பிடியில்

29 Jul 2026

இலங்கை கடற்படையினரால் மன்னார் சவுத் பார் கடற்கரை மற்றும் நிலப்பரப்பை உள்ளடக்கிய பகுதியில் 2026 ஜூலை 28 அன்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியே நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட மற்றும் முறையான அனுமதியின்றி நிலப்பரப்பு வழியாக கொண்டு செல்லப்பட்ட சுமார் பதினான்காயிரத்து எழுபத்திரண்டு (14,072) கடல் அட்டைகள் அடங்கிய கையிருப்புடன் 12 சந்தேகநபர்கள், 03 டிங்கி படகுகள் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்கள் சட்டத்தின் முன் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை கப்பலான கஜபா நிறுவனத்திற்கு கிடைத்த நம்பிக்கையான தகவலுக்கு அமைய, முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான 03 டிங்கி படகுகள் மற்றும் 02 மோட்டார் சைக்கிள்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியே நிலப்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு அனுமதியின்றி நிலப்பரப்பு வழியாக கொண்டு செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான கடல் அட்டைகளை கடற்படையினர் மீட்டெடுத்தனர்.

இங்கு கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட சந்தேகநபர்கள் 24 முதல் 46 வயதுக்குட்பட்ட மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அச்சந்தேகநபர்கள், கடல் அட்டைகள், டிங்கி படகுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்வளப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Accessibility Tools