சட்டவிரோதமாக பீடி இலைகளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சந்தேக நபர் ஒருவர் நீர்கொழும்பில் கடற்படையினரால் கைது
2026 ஜூன் 28 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட அறுநூற்று இருபது (620) கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற ஒரு (01) சந்தேக நபர் (01) டிங்கி உடன் கைது செய்யப்பட்டார்.
இதன்படி, நீர்கொழும்பு களப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த களப்புப் பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்று மேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் கெளனியால் பரிசோதிக்கப்பட்டது. அங்கு, பதினேழு (17) பைகளில் பொதிச் செய்யப்பட்ட அறுநூற்று இருபத்தைந்து (625) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு சந்தேக நபரும் (01) டிங்கி படகும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.
மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர், டிங்கி மற்றும் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.