நீர்கொழும்பு களப்பில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 316 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
2026 ஜூன் 10 ஆம் திகதி நீர்கொழும்பு களப்பு பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் முந்நூற்று பதினாறு (316) கிலோகிராம் பீடி இலைகள் அடங்கிய தொகை கைப்பற்றப்பட்டது.
அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான கெளனி நிறுவனத்தினால் நீர்கொழும்பு களப்பு பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்து கொண்டிருந்த ஒன்பது (09) பைகள் பரிசோதிக்கப்பட்டன. அங்கு, கடற்படை நடவடிக்கைகளின் போது கரைக்கு கொண்டு வர முடியாததால் கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று பதினாறு (316) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையால் கைப்பற்றப்பட்டன.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.