Sri Lanka Navy – Official Logo
SPORT NEWS 2026

லெப்டினன்ட் கமாண்டர் ஆரச்சிகே நிஸ்ஸங்க சர்வதேச Taekwondo வெற்றிகள்

13 Aug 2026

தென்கொரியாவில் நடைபெற்ற சர்வதேச தாய்க்வாண்டோ போட்டிகளில் பங்கேற்ற இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் ஆரச்சிகே நிஸ்ஸங்க, நான்கு சர்வதேச பதக்கங்களை வென்று தாய்நாட்டிற்கும் கடற்படைக்கும் பெருமை சேர்த்துத்தந்துள்ளார்.

தென்கொரியாவின் Chuncheon நகரில் 2026 ஜூலை 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடைபெற்ற ‘Chuncheon Open International Taekwondo Championship’ போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் ஆரச்சிகே நிஸ்ஸங்க, அதில் இரண்டு (02) வெண்கலப் பதக்கங்களை வெல்வதற்குச் சமர்த்தானார்; அத்துடன் தென்கொரியாவின் சியோல் நகரில், Kukkiowon உலக தாய்க்வாண்டோ தலைமையகத்தில் 2026 ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை நடைபெற்ற ‘World Taekwondo Festival’ போட்டியிலும் இந்த அதிகாரி மேலும் ஒரு (01) வெள்ளிப் பதக்கத்தையும் ஒரு (01) வெண்கலப் பதக்கத்தையும் தாய்நாட்டிற்குப் பெற்றுக்கொடுக்க முடிந்தது.

Accessibility Tools