Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

கடற்படைத் தளபதி அதி வணக்கத்திற்குரிய பரம்பொருள்திரு கர்தினால் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றார்

12 Aug 2026

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்கள், கொழும்பு மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையைக் கொழும்பு ஆயர் இல்லத்தில் இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 12) சந்தித்து, கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசி பெற்றார்.

இச்சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு தொடர்பிலும், மத நல்லிணக்கம் தொடர்பிலும் கடற்படை ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டிய கர்தினால் ஆண்டகை அவர்கள், கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காகக் கடற்படைத் தளபதி உட்பட முழுமையான கடற்படைக்கும் தனது ஆசீர்வாதங்களைப் பிரார்த்தித்தார்.

மேலும், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதியினால் கொழும்பு ஆயர் இல்லத்தின் விருந்தினர் நினைவேட்டில் குறிப்பொன்றும் எழுதப்பட்டது.

Accessibility Tools