இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காகக் கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் கேர்னல் (colonel Muhammad Talha Badar) அவர்கள், இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 12) உத்தியோகபூர்வ சந்திப்பிற்காகக் கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களைச் சந்தித்தார்.
இவ்வுத்தியோகபூர்வ சந்திப்பின் போது, இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்னல் (Colonel Muhammad Talha Badar) அவர்கள், 27 ஆவது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததனைத் தொடர்ந்து, இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு உட்பட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்துச் சுமுகமாக உரையாடினார்.
மேலும், இவ்வுத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்குமிடையே நினைவுப்பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.