ஓய்வுபெறவுள்ள இராணுவத் தளபதி கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தனது மகத்தான சேவை நிறைவின் பின் இராணுவத்திலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்னர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவைச் சந்திக்கும் உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (2026 ஜூலை 30) கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதிக்கு, இலங்கை கடற்படையின் கௌரவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாரம்பரிய முறைப்படி கடற்படை அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, ஓய்வுபெறவுள்ள இராணுவத் தளபதியின் மகத்தான சேவையைப் பாராட்டிய கடற்படைத் தளபதி, இராணுவத்திற்கும் கடற்படைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் அவர் காட்டிய முன்மாதிரியான தலைமையத்துவத்தையும் சிறப்பாகப் பாராட்டினார்.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகளும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.