Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

கடற்படைத் தளபதியின் பாராட்டைப் பெற்ற திருகோணமலை கடற்படைத் தள நலன்புரி திட்டங்கள்

21 Jul 2026

திருகோணமலை கடற்படைத் தளத்தில் பணியாற்றும் கடற்படை வீரர்களின் நலன்புரி மற்றும் நல்வாழ்வை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அதன் கட்டளை அதிகாரி கெப்டன் சமன் ரத்நாயக்கவின் வழிகாட்டலிலும் கடற்படை வீரர்களின் கூட்டுப் பங்களிப்பிலும் நிறுவப்பட்ட புதிய நலன்புரித் திட்டங்கள், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவின் பாராட்டைப் பெற்றுள்ளன.

இந்த நலன்புரித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய ‘கலா அரண’ (ND Art Corner), ‘உணவகம்’ (ND Cafe), பழச்சாறு விற்பனை நிலையம் (Juice Bar) மற்றும் ‘சலவை வசதிக் கட்டிடம்’ (Dockyard Laundry) ஆகியவற்றைப் பார்வையிடுவதற்காக கடற்படைத் தளபதி 2026 ஜூலை 11 ஆம் திகதி அங்கு விஜயம் மேற்கொண்டார். கடற்படை வீரர்களுக்கு ஆரோக்கியமான, கூட்டுறவு மற்றும் பயனுள்ள பணிச்சூழலை உருவாக்குவதே இந்தத் திட்டங்களின் முதன்மை நோக்கமாகும். இந்த அவதானிப்பு விஜயத்தின் போது கருத்துத் தெரிவித்த கடற்படைத் தளபதி, கடற்படை வீரர்களின் நலன்புரி மற்றும் உடல், மன ஆரோக்கியத்திற்காக இலங்கை கடற்படைக் கப்பல் தளம் (SLNS Dockyard) எடுத்துள்ள இந்த பாராட்டத்தக்க நடவடிக்கைகளைப் பாராட்டியதுடன், நேர்மறையான மற்றும் உற்சாகமான பணியாளர்களை உருவாக்குவதில் இத்தகைய நலன்புரி முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், இந்நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய உள்ளிட்ட அக்கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Accessibility Tools