பாதுகாப்பு பிரதி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் கள ஆய்வு விஜயம் மேற்கொண்டார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), செவ்வாய்க்கிழமை (26 மே) யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள பல முக்கிய இடங்களுக்கு கள ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த கள விஜயத்தில் அவருடன், கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மற்றும் தொடர்புடைய அரச அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.
இந்த விஜயத்தின் போது, தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் விசேட கவனம் செலுத்தினார். அப்பிரதேச பாதுகாப்பு நிலைமையை அவர் மதிப்பீடு செய்ததுடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் தற்போதைய முயற்சிகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்களையும் நடத்தினார்.
மேலும், பொதுமக்களின் காணி தொடர்பான விடயங்களிலும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கவனம் செலுத்தி, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கும் நடவடிக்கைகளின் தற்போதைய நிலை மற்றும் மீள்குடியேற்ற முயற்சிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இக் கள ஆய்வுகளில் இராணுவத் தளபதி, பாதுகாப்புப் படைத் தலைமையகம் - யாழ்ப்பாணம் (SFHQ-J) தளபதி, பிராந்திய பிரதேச செயலாளர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
Media Courtesy - www.defence.lk