கடற்படை வீரர்களுக்கான முறையான நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
சட்டவிரோத நிதி வணிகங்கள், தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள், நிதி மோசடி முறைகள் மற்றும் முறையான நிதி முதலீடுகள் குறித்து கடற்படை வீரர்களை அறிவூட்டும் விழிப்புணர்வுத் திட்டம், 2026 ஜூன் 15 அன்று இலங்கை மத்திய வங்கி மற்றும் மாத்தறை பிராந்திய மத்திய வங்கி அலுவலக அதிகாரிகளின் வளங்களுடனான பங்களிப்புடன், இலங்கை கடற்படை கப்பல் நிபுண நிறுவனத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இதன்போது, நிதிசார் அறிவு, தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் மற்றும் சட்டப் பின்னணி, சட்டவிரோத வைப்புகளைப் பெறுதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத/சட்டவிரோத நிதி வணிகங்கள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் மற்றும் டிஜிட்டல் மோசடிகள் போன்ற விடயங்கள் குறித்து கடற்படை வீரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதன் மூலம் கடற்படை வீரர்களின் நிதிசார் அறிவை மேம்படுத்தவும், அவர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கடற்படை எதிர்பார்க்கிறது.
மேலும், இந்த விழிப்புணர்வுத் திட்டத்தில் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி உள்ளிட்ட அந்த கட்டளையைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் கலந்துகொண்டனர்.