நல்லெண்ணப் பயணத்திற்காகத் தீவிற்கு வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களான ‘PNS TAIMUR’, ‘PNS ASLAT’ மற்றும் PNS/M HANGOR நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றன
பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்கள் நல்லெண்ண வருகைக்காக 2026 ஜூன் 01 ஆம் திகதி தீவிற்கு வந்ததையடுத்து, அந்த இரு கப்பல்களின் நல்லெண்ண வருகையானது நிறைவடைந்த பின், குறித்த கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலும் 2026 ஜூன் 04 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட்டன. ‘PNS TAIMUR’,‘PNS ASLAT’ மற்றும் நீர்மூழ்கிக் கப்பலும் ஆகிய கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் தனது கடற்படை மரபுகளின்படி கப்பல்களுக்கு கொழும்புத் துறைமுகத்தில் பிரியாவிடை அளித்தனர்.
இந்தக் கப்பல்கள் தீவில் தங்கியிருந்தபோது, கப்பல்களின் கட்டளை அதிகாரிகளுக்கும், மேற்கு கடற்படைக் கட்டளைத் தளபதி மற்றும் மேற்கு கட்டளைத் தலைமையகத்தில் கடற்படை நடவடிக்கைகளுக்கான கொடி அதிகாரிக்கும் இடையே உத்தியோகபூர்வ சந்திப்புகள் நடைபெற்றன.
மேலும், இலங்கை கடற்படை வீரர்களுக்கு கப்பல்களையும் நீர்மூழ்கிக் கப்பலையும் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்ததுடன், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலின் குழுவினர் தீவில் உள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களையும் பார்வையிட்டனர்.