Sri Lanka Navy – Official Logo

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் நுரைச்சோலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

14 Aug 2026

2026 ஆகஸ்ட் 13 ஆம் திகதி நுரைச்சோலையின் பனியடிய பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் பொலிசாருடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய தொகுதியொன்று பறிமுதல் செய்யப்பட்டது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவுக்குக் கிடைத்த நம்பகமான தகவலின்படி, நுரைச்சோலை பொலிசாருடன் இணைந்து நொரோச்சோலை பனியடிய பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ஆட்கள் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த லொரியொனடறில் (01) முப்பத்தெட்டு (38) சந்தேகத்திற்கிடமான பைகள் சோதனையிடப்பட்டன. இதன்போது, சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டு கடத்துவதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த, ஆயிரத்து நானூற்று அறுபத்து நான்கு (1464) கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி இவ்வாறு கைப்பற்றப்பட்டது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் சட்டத்தின் பிடியில் சிக்கிய பீடி இலைத் தொகுதியும் லொரியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Accessibility Tools