Sri Lanka Navy – Official Logo

மன்னார் கடல் பகுதியில் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் சுழியோடி கடல் அட்டைகளைப் பிடித்த 04 சந்தேகநபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்

07 Jul 2026

இலங்கை கடற்படையினரால் 2026 ஜூலை 07 ஆம் திகதி மன்னார், உஸ்முக்குந்துறை கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேரங்களில் சுழியோடி கடல் அட்டைகளைப் பிடித்த நால்வரும் (04), ஒரு படகு (01), சுமார் 554 கடல் அட்டைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, வட மத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிறுவனத்தினால், மன்னார், உஸ்முக்குந்துறைக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று சோதனையிடப்பட்டது. இதன்போது, சட்டவிரோதமான முறையில் இரவு நேரங்களில் சுழியோடி பிடிக்கப்பட்டு, கரைக்குக் கொண்டு வரப்பட்ட கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேகநபர்கள் 26 முதல் 33 வயதுக்கு இடைப்பட்ட மன்னார், பல்லமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள், படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

Accessibility Tools