Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

கடற்படையின் பங்களிப்புடன், பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தில் மீனவ சமூகத்தினருக்கான முதலுதவிப் பயிற்சித் திட்டம் நடைபெற்று வருகிறது

18 Aug 2026

இலங்கை கடற்படையினர், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு மற்றும் மீன்பிடி, நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியவை இணைந்து, மீனவ சமூகத்தினருக்கான முதலுதவி விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை வழங்கும் திட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதுடன், வடக்கு கடற்படை கட்டளையின் வளப் பங்களிப்புடன் நடத்தப்பட்ட மீனவர்களுக்கான முதலுதவிப் பயிற்சித் திட்டம், 2026 ஆகஸ்ட் 17 ஆம் திகதி யாழ்ப்பாணம், பருத்தித்துறை மீன்பிடித் துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

மீனவ சமூகத்தின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, தீவின் பல மீன்பிடித் துறைமுக வளாகங்களை உள்ளடக்கிய வகையில், 2026 ஆகஸ்ட் 17 முதல் நவம்பர் 18 வரை முறையான காலக் கெடுவுக்கு அமைவாக நடத்தப்படும் இந்த முதலுதவிப் பயிற்சித் தொடர், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் தலைமையில், மீன்வளம் மற்றும் நீர்வளங்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மற்றும் இலங்கை கடற்படையின் சுகாதார சேவைகள் திணைக்களத்தைச் சேர்ந்த நிபுணர்களின் தலைமையில். கிழக்கு, மேற்கு, வடக்கு, வடமேற்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு கடற்படைக் கட்டளைகளின் தளபதிகளின் மேற்பார்வையில் கடற்படை இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையில், கட்டளை மருத்துவக் குழுவினரின் வளப் பங்களிப்புடனும், யாழ்ப்பாண மீன்பிடி உதவிப் பணிப்பாளர் மற்றும் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுக மேலாண்மையின் ஒருங்கிணைப்பு மற்றும் அமைப்புப் பங்களிப்புடனும் நடத்தப்பட்ட இந்த முதலுதவிப் பயிற்சிப் பட்டறையின் போது; கடலில் மீனவ சமூகத்தினருக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும், அவர்கள் கரைக்குச் சென்றடையும் வரை அல்லது மருத்துவ உதவி பெறும் வரை பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி அல்லது சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்தும் மீனவ சமூகத்தினருக்குக் கல்வி அளிக்கப்பட்டது.

மேலும், அடிப்படை உயிர் காப்ப்பு முறைகள் (Basic Life Support) குறித்தும், மீன்பிடித் தொழிலில் ஈடுபடும்போது ஏற்படக்கூடிய விபத்துகள் மற்றும் விபத்தொன்றின் பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், இந்தத் திட்டத்தில் கலந்துகொண்ட மீனவச் சமூகத்திற்கு தத்துவார்த்த ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் விழிப்புணர்வு ஊட்டப்பட்டதோடு, அது தொடர்பான பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதும் அங்கு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

Accessibility Tools