'தித்வா' புயலின் போது மனிதநேய நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட கடற்படை அதிகாரிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்
'தித்வா' புயலின் காரணமாக நாட்டில் ஏற்பட்ட தேசிய பேரிடர் நிலைமையை மேலாண்மை செய்வதற்கும், மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கை கடற்படை அதிகாரிகளின் சேவையைப் பாராட்டி, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம், இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 11) மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், மேற்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார தலைமையில் நடைபெற்றது.
2025 நவம்பர் மாதம் 28 ஆம் திகதி இலங்கையைப் பாதித்த சீரற்ற வானிலை மற்றும் 'தித்வா' புயலின் காரணமாக அபாயகரமான சூழ்நிலைகளை எதிர்நோக்கிய மக்களை மீட்பது, அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவது மற்றும் பேரிடர் நிலைமையினால் ஏற்பட்ட சேதங்களை விரைவாக வழமைக்குக் கொண்டுவருவதற்காக இலங்கை கடற்படையின் அனைத்து கடற்படை கட்டளைகளின் அதிகாரிகளும் தமது கடமை எல்லைகளுக்கு அப்பால் சென்று தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.
மேலும், வெள்ளப் பெருக்குக்குப் பிந்தைய நிவாரண நடவடிக்கைகளின் கீழ், நீர் ஆதாரங்களைச் சுத்தப்படுத்துவதற்கும், சுத்திகரிப்பு நிலையங்களில் செயலிழந்த நீரேற்றுப் பொறிகளைத் திருத்துவதற்கும் பராமரிப்பதற்கும் கடற்படை மூழ்காளர் குழுக்கள் மூலம் தேவையான மூழ்கல் உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு 'தித்வா' புயலின் காரணமாக ஏற்பட்ட பேரிடர் நிலைமையின் போது மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கும், மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கும் அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் செயற்பட்ட கடற்படை அதிகாரிகளின் விசேட சேவையைப் பாராட்டும் வகையிலேயே இப்பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த மதிப்பீட்டுக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில், மேற்கு கடற்படை கட்டளையின் பிரதிப் தளபதி கொமடோர் அருண விஜேவர்தன உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.