Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

வடக்கு கடற்படைக் கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன கடமைகளைப் பொறுப்பேற்றார்

04 Aug 2026

வடக்கு கடற்படைக் கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன, இன்றைய தினம் (2026 ஆகஸ்ட் 04) வடக்கு கடற்படைக் கட்டளைத் தலைமையகத்தில் அக்கட்டளையின் தளபதியாக உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடற்படை மரபுகளுக்கு அமைவாக புதிய தளபதி வடக்கு கடற்படைக் கட்டளைத் தலைமையகத்திற்கு வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்டளையின் தற்காலிகத் தளபதியாகக் கடமையாற்றிய கொமடோர் புத்திக ரூபசிங்கவினால் தலைமையகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கடமைகள் கையளிக்கப்பட்டன.

ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன, வடக்கு கடற்படைக் கட்டளையின் தளபதி பதவியுடன் கூடுதலாகக் கடற்படையின் தலைமை நீரியல் வரைவியல் அதிகாரியாகவும் கடமையாற்றுகிறார்.

Accessibility Tools