‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ போட்டிக்கு இணையாக பள்ளி மாணவர்களுக்கான பாயமரப் படகு ஓட்டுதல் பற்றிய பயிற்சி திட்டம்
‘Commandant’s Cup Sailing Regatta - 2026’ போட்டிக்கு இணையாக, இலங்கை கடற்படை இலங்கை பாய்மரப் படகுச் சங்கத்துடன் (Yachting Association of Sri Lanka - YASL) இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்த பாய்மரப் படகு ஓட்டுதல் குறித்த கோட்பாட்டு மற்றும் செய்முறைப் பயிற்சித் திட்டத்தை 2026 ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் திருகோணமலை கடற்பகுதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இதன்படி, இந்தப் பயிற்சித் திட்டத்தில் திருகோணமலை திஸ்ஸ மகா வித்யாலயம், சிங்கள மகா வித்யாலயம், புனித மரியாள் கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, சாஹிரா கல்லூரி மற்றும் ஸ்ரீ கோணேஸ்வர கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் 33 மாணவ மாணவிகள் கலந்துகொண்டதுடன், இவ்வாறான பயிற்சித் திட்டத்தின் மூலம் விளையாட்டின் ஊடாக வலுவான எதிர்கால சந்ததியை உருவாக்குவதையும், நாட்டின் பாடசாலை மாணவர்களிடையே பாய்மரப் படகு விளையாட்டைப் பிரபலப்படுத்துவதையும் கடற்படை எதிர்பார்க்கிறது.